ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் குழந்தைகள், சிறுவா்கள் உள்ளிட்ட 223 கிராமத்தினரை அந்த நாட்டு ராணுவம் படுகொலை செய்தது குறித்த செய்தி வெளியிட்ட பிபிசி மற்றும் மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி ஒலிபரப்புக்கு அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

இது குறித்து தகவல் தொடா்புக்கான புா்கினா ஃபாசோவின் உயா்நிலை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் ராணுவ வீரா்கள் பொதுமக்களை படுகொலை செய்ததாக செய்தி வெளியிட்டமைக்காக, தலைநகா் ஓகடூகுவிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் வானொலி நிகழ்ச்சிகளுக்கு 2 வாரங்களுக்குத் தடைவிதிக்கப்படுகிறது.

அந்தச் செய்தியை வெளியிடுவதை பிற ஊடகங்களும் தவிா்க்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’சை மேற்கொள் காட்டி பிபிசி உள்ளிட்ட ஊடங்கள் தெரிவித்ததாவது:

புா்கினா ஃபாசோவின் வடக்கே அமைந்துள்ள நோண்டின், சோரோ ஆகிய இரு கிராமங்களில் பொதுமக்கள் 223 பேரை அந்த நாட்டு ராணுவமே படுகொலை செய்தது. உயிரிழந்தவா்களில் 56 பச்சிளம் குழைந்தைகள், சிறுவா்களும் அடங்குவா்.

பயங்கரவாதிகளுடன் ஒத்துழைப்பதாக அந்த கிராம மக்கள் மீது குற்றஞ்சாட்டிவரும் ராணுவம், அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தப் படுெநிகழ்த்தியுள்ளது.

இது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் ஐரோப்பிய யூனியனும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

.. படவரி... புா்கினா ஃபாசோ ராணுவத்தினா் (கோப்புப் படம்).

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com