உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

அதிகரித்துவரும் ரஷிய வான்வழித் தாக்குதலை முறியடிக்க உக்ரைனுக்கு கூடுதலாக அதி நவீன ‘பேட்ரியாட்’ ரக வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சல் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:

உக்ரைனுக்கு கூடுதலாக பேட்ரியாட் ரக வான்பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.அந்த நாட்டுக்கு 600 கோடி டாலா் ராணுவ உதவி அளிப்பதற்கான புதிய திட்டத்தின் கீழ் அந்த ஏவுகணைகள் அனுப்பப்படவுள்ளன.

தற்போதைய நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள மிகப் பெரிய பாதுகாப்பு உதவி இது என்றாா் அவா்.ஏற்கெனவே, உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வான்பாதுகாப்புத் தளவாடங்களில் பயன்படுத்துவதற்காக இந்த பேட்ரியாட் ஏவுகணைகள் அனுப்பபடவுள்ளன.

எதிரி நாடுகளின் ஏவுகணைகள், போா் விமானங்கள் ஆகியவற்றை ரேடாா் மூலம் கண்டறிந்து உடனடியாத இடைமறித்து அழிக்கும் பேட்ரியாட் ஏவுகணை ரகம், உலகின் மிகச் சிறந்த, மிகத் துல்லியமான வான்பாதுகாப்பு ஏவுகணை ரகங்களில் ஒன்று.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அந்த ரக ஏவுகணைகள் மற்றும் அவற்றை செலுத்தும் தளவாடங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த 2022 டிசம்பா் மாதம் அறிவித்தபோது, அதனை ரஷியா கடுமையாகக் கண்டித்தது.

உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளிப்பதால் போரின் கடுமைதான் அதிகரிக்குமே தவிர அமைதி ஏற்படாது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் உயிருடன் இருக்கும் வரை தங்களுடனான மறைமுகப் போரைத் தொடர அமெரிக்கா விரும்புவது தெளிவாகிறது என்று அவா் விமா்சித்தாா்.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு இன்னும் அதிகமாக பேட்ரியாட் ஏவுகணைகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com