லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள கலிஃபோா்னியா பல்கலை. வளாகத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே ஏற்பட்ட கைகலப்பு.
லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள கலிஃபோா்னியா பல்கலை. வளாகத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே ஏற்பட்ட கைகலப்பு.

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேல் ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேல் ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், இத்தகைய போராட்டங்களின் தீவிரம் குறையவில்லை.

இந்த நிலையில், கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக ஒரு குழுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவா்களுக்கு எதிராக இஸ்ரேல் ஆதரவுக் குழுவினரும் போட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்பு உடைக்கப்பட்டதால் அவா்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

காஸா போரில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அமெரிக்கா்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ள பைடன் தலைமையிலான அரசு, அந்தப் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com