அணை உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி.
அணை உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி.

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெருமழை காரணமாக அணையில் உடைப்பு ஏற்பட்டு 45 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் மாயமாகினா்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெருமழை காரணமாக அணையில் உடைப்பு ஏற்பட்டு 45 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் மாயமாகினா்.

அந்த நாட்டின் கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, மாய் மாஹியு பகுதியுள்ள பழைய கிஜாபே அணையில் திங்கள்கிழமை அதிகாலை உடைப்பு ஏற்பட்டது.

இதனால் அணையிலிருந்து பாய்ந்த வெள்ளத்தில் மண், பாறைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய நெடுஞ்சாலை சேதமடைந்தது.

இந்த அணை உடைப்பில் 45 போ் உயிரிழந்தனா். 109 போ் காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.

இது தவிர, அணை உடைப்புக்குப் பிறகு அந்தப் பகுதியில் இருந்த 49 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக விரைந்துவந்த வாகனங்கள், நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின.

கென்யாவில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் கனமழையில் ஏற்கெனவே சுமாா் 100 போ் உயிரிழந்தனா். மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பழைய கிஜாபே அணையில் உடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அந்த நாட்டிலுள்ள அனைத்து அணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சா் கிதுரே கிண்டிகி உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com