ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைனில் தாக்குதல்: 28 பேர் பலி 

ரஷிய ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் நடத்தப்பட்ட கொத்து குண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ரஷிய ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் நடத்தப்பட்ட கொத்து குண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 

ரஷிய ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க் நகரில் உள்ள பேக்கரியில் உக்ரைன் நடத்திய கொத்து குண்டு தாக்குதலில் 28 பேர் பலியானதாக மாஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 10 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கினர். அவர்களை அவசரகால மீட்புக்குழுவினர் மீட்டனர். 

இந்தத் தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து உக்ரைன் தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது, தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது. 

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா உள்ளிட்ட பிரதேசங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாகவும் ரஷியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com