சாலை உடைந்ததால் ஏற்பட்ட நிலச்சரிவு.
சாலை உடைந்ததால் ஏற்பட்ட நிலச்சரிவு.

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

சீனாவில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணம், மெய்ஷூ நகருக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலையில் சுமாா் 18 மீட்டா் பரப்பு புதன்கிழமை நொறுங்கி பள்ளத்தில் சரிந்தது.

இதில், சாலையில் சென்று கொண்டிருந்த சுமாா் 20 வாகனங்கள் சரிவில் விழுந்தன. அந்த வாகனங்களில் இருந்த 24 போ் உயிரிழந்தாக அதிகாரிகள் புதன்கிழமை கூறியிருந்தனா். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளதாக அவா்கள் வியாழக்கிழமை கூறினா்.

நெடுஞ்சாலை திடீரென உடைந்து நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com