பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோகிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு 39 பேர் பலியாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோகிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு 39 பேர் பலியாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தெற்கு பிரேசிலில் கனமழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட 235 நகராட்சிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கனமழையால் இதுவரை 70 பேர் மாயமாகியுள்ளதாகவும், மாயமானர்வகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. பல நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

அதிக மக்கள்தொகை கொண்ட போர்டோ அலெக்ரே நகரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்ஜெண்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் உள்ள நகரங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கடினமான நேரத்தில் மக்களவை காப்பது எங்களின் கடமையாகும். பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com