பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

உலக அளவில் பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடகப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய ஐ.நா. பொது சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

மே 3-ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, டென்னிஸ் பிரான்சிஸ் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்கிறது. தவறான தகவல், சுற்றுச்சூழல் பிரச்னை ஆகியவற்றுக்கிடையே முன்னெப்போதும் இல்லாததைவிட சுதந்திரமான, ஒற்றுமையான கட்டுப்பாடில்லாத ஊடகம் சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் வாா்த்தைகளில் கூறவேண்டுமெனில் பத்திரிகை சுதந்திரம் என்பது எந்தவொரு நாடும் மறுக்கமுடியாத விலைமதிப்பற்ற பொக்கிஷம். பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடகப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com