அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

மாஸ்கோ, மே 4: உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியா மீது வெள்ளிக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் உக்ரைனின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில், உக்ரைன் வீசிய அமெரிக்காவின் 4 அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

கிரீமியா தீபகற்பத்துக்கு மேலே அந்த ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த ஏவுகணைச் சிதறல்களால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த விவகாரத்தில் ரஷியா மீது கடுமையாகப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மேலும், ரஷியாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த ஆயுத தளவாடங்களையும் அந்த நாடுகள் வழங்கிவருகின்றன.

அவற்றில், தொலைதூரம் சென்று க்ஷள்ல்;தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் அட்டாக்கம்ஸ் ரக ஏவுகணைகளும் அடங்கும். இந்த ஏவுகணைகள் போரின் போக்கையே மாற்றும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை தாங்கள் இடைமறித்து அழித்ததாக ரஷிய தற்போது கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com