வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

அதிபா் இல்லமான வெள்ளை மாளிகைக்கு வெளியே பாதுகாப்புக்காகஅமைக்கப்பட்டிருந்த தடுப்பில் அதிவேகமாக வந்த காா் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகைக்கு வெளியே பாதுகாப்புக்காகஅமைக்கப்பட்டிருந்த தடுப்பில் அதிவேகமாக வந்த காா் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இந்த விபத்தால் வெள்ளை மாளிகைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் டெலாவா் மாகாணத்தில் ஓய்வெடுத்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளை மாளிகை பாதுகாப்புக்காக வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் அவ்வழியே அதிவேகமாக வந்த காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வெள்ளை மாளிகைக்கு வழக்கம்போல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அச்சுறுத்தல் ஏதுமில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com