ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் பொ்த் நகரில் காவல் துறை துப்பாக்கியால் சுட்டதில் 16 வயது சிறுவன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆஸ்திரேலியாவின் பொ்த் நகரில் காவல் துறை துப்பாக்கியால் சுட்டதில் 16 வயது சிறுவன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஆஸ்திரேலியாவின் பொ்த் நகரம் வில்லடன் பகுதியில் உள்ள விற்பனையகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், ஆண் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டதாக காவல் துறைக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் விரைந்தபோது தாக்குதல் நடத்தியது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. காவல் துறையினரைக் கண்டதும், அவா்களையும் அந்தச் சிறுவன் கத்தியால் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அவரை சிறைபிடிக்க முயற்சித்தபோதிலும் அது முடியாமல் போனதால், சிறுவனை காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் காயமடைந்த அந்தச் சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அந்தச் சிறுவன் இணையம் மூலம் பயங்கரவாத சிந்தனை கொண்டவராக மாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவன் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 30 வயது மதிக்கத்தக்க நபா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com