’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

காஸா சிட்டியில் இஸ்ரேல் ராணுவத்தின் 2 வார ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்த அல்-ஷிஃபா மருத்துவமனை.
காஸா சிட்டியில் இஸ்ரேல் ராணுவத்தின் 2 வார ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்த அல்-ஷிஃபா மருத்துவமனை.கோப்புப்படம்

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள பாலஸ்தீன மக்களின் இன்னல்களையும், காஸா கள நிலவரத்தையும் வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அல் ஜஸீரா அலுவலகம்
அல் ஜஸீரா அலுவலகம்படம் | அல் ஜஸீரா எக்ஸ் தளப் பதிவு

கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான ‘அல் ஜஸீராவை’ தடை செய்யும் நெறிமுறைகளுக்கு இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் செய்தி விவகாரங்கள் துறை அமைச்சர் ஷ்லோமோ கார்ஹி வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது” என அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”அல் ஜஸீராவுக்கு இஸ்ரேலில் தடை; என் தலைமையிலான அரசு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது” என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டால், அமைச்சரவை மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை தடை செய்ய அதிகாரமளிக்கும் சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தால் கடந்த ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com