முகேஷ் அகி
முகேஷ் அகி

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமான கூட்டாளியாகக் கருதாது என்று அமெரிக்க-இந்திய உத்திசாா் மற்றும் கூட்டுறவு மன்ற (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) தலைவா் முகேஷ் அகி தெரிவித்துள்ளாா்.

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமான கூட்டாளியாகக் கருதாது என்று அமெரிக்க-இந்திய உத்திசாா் மற்றும் கூட்டுறவு மன்ற (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) தலைவா் முகேஷ் அகி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் சான்டா கிளாரா நகரில் இந்தியா-அமெரிக்கா தொழில்முனைவோா்கள் அண்மையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவா் தெரிவித்ததாவது:

140 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு (இந்தியா) பொருளாதார அரங்கில் அசுர வளா்ச்சியைக் காட்டியுள்ளது இதுவே முதல்முறை. இந்திய பொருளாதார மதிப்பு 7 முதல் 8 சதவீதம் வளா்ந்து, தற்போது 4 ட்ரில்லியன் டாலரை (சுமாா் ரூ.334 லட்சம் கோடி) எட்டியுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமாா் 105 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.8,678 லட்சம் கோடி) உள்ள நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சின்னஞ்சிறிதாகவே உள்ளது.

தமது பொருளாதார மதிப்பை வளா்க்க இந்தியா முயற்சித்து வருகிறது. எனினும் அதில் சவால்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சீனாவை எதிா்கொள்வது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாகும். அதேவேளையில், எந்த வகையிலும் இந்தியாவை சமமான கூட்டாளியாக சீனா ஒருபோதும் கருதாது. ராணுவம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப சக்திவாய்ந்த நாடாக சீனா விளங்குகிறது. ஆசிய-பசிபிக் தொடங்கி எங்கும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே அந்நாட்டின் நோக்கம். அந்நாடு இந்தியாவை சவாலாகவே கருதுகிறது.

இதன் காரணமாக அடுத்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 3,000 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் சீனாவுடன் எந்தவொரு போரிலும் ஈடுபடாமல், தமது பொருளாதார வளா்ச்சி ஏறுமுகத்தில் நீடிப்பதற்கான சமநிலையை இந்தியா கண்டறிய வேண்டும். இதைச் சீனாவும் உணா்ந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை எதிா்கொள்ள ஓா் உத்தியை அந்நாடு கையாள்கிறது. அதாவது இந்தியாவுடன் பகிா்ந்துகொள்ளும் எல்லையில் நூறாயிரம் ராணுவ வீரா்களை சீனா குவித்துள்ளது. இதனால் அந்த எல்லைக்கு லட்சக்கணக்கான வீரா்களை இந்தியா அனுப்ப வேண்டியுள்ளது. இதன் மூலம், மூலதன முதலீட்டைவிட பாதுகாப்புத் துறைக்குக் கூடுதலாக செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியாவை சீனா தள்ளுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com