3-ஆவது முறையாக விண்வெளி
செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருக்கிறாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58), 3-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை விண்வெளிக்குச் செல்லவிருக்கிறாா்.

அந்த நாட்டின் போயிங் நிறுவனம் ‘ஸ்டாா்லைனா்’ என்ற விண்வெளி ஓடத்தை உருவாக்கி வருகிறது. அந்த ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது. ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்படவிருக்கும் ஸ்டாா்லைனரில் சுனிதா வில்லியம்ஸுடன் பட்ச் வில்மோரும் செல்லவிருக்கிறாா்.

இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியாா் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com