அமெரிக்கா: ஸ்டாா்லைனா் 
சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு

அமெரிக்கா: ஸ்டாா்லைனா் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ‘ஸ்டாா்லைனா்’ விண்வெளி ஓடத்தின் சோதனை ஓட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்னா் மேற்கொண்ட சோதனையில், அதனை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டின் ஆக்ஸின் அழுத்த வெளியேற்று வால்வு தானாக திறந்து மூடியது.

அதையடுத்து, அந்த ராக்கெட் செலுத்தப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோா் ஆகியோருடன் ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடம் சோதனை முறையில் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து அந்த விண்வெளி ஓடத்தை செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஸ்பேஸ் எக்ஸுக்கு அடுத்தபடியாக சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆள்களை அனுப்பக்கூடிய 2-ஆவது தனியாா் நிறுவனம் என்ற பெருமையை போயிங் பெறும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com