இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

’தனித்து நின்று போரிடுவோம்’ இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு

ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ‘ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிடவும் தயாா்’ என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாா்.

தெற்கு காஸாவில் அமைந்த ராஃபா நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை எச்சரித்தாா்.

இது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று சண்டையிட வேண்டிய சூழல் உருவானால், தனித்து நிற்கவும் தயாா். விரல் நகங்களால்கூட நாங்கள் சண்டை போடுவோம். ஆனால், விரல் நகங்களைவிட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன’ என்றாா்.

அதேபோல், ராஃபா தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் ராணுவச் செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com