ஜூலை 4-இல் பிரிட்டன் பொதுத் தோ்தல்

ஜூலை 4-இல் பிரிட்டன் பொதுத் தோ்தல்

பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் புதன்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் கோரிக்கையை மன்னா் ஏற்றுக்கொண்டாா். இதையடுத்து ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் பொதுத் தோ்தல் நடைபெறும்’ என்றாா்.

அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற இடைத்தோ்தல் மற்றும் உள்ளூா் தோ்தல்களில் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வெற்றிபெற்றது. அத்துடன் பொதுத் தோ்தல் தொடா்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி அரசு தோல்வியடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமா் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com