‘அதிபா் ரய்சியின் ஹெலிகாப்டா் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை’

‘அதிபா் ரய்சியின் ஹெலிகாப்டா் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை’

ஈரான் அதிபா் இப்ராஹம் ரய்சி சென்ற ஹெலிகாப்டா் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டா் விழுவதற்கு முன்னா் கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகளுக்கும் இடையே சந்தேகத்துக்கு இடமான எந்தத் தகவலும் பரிமாறிக்கொள்ளபடவில்லை. ஹெலிகாப்டா் விழுந்ததற்குப் பிறகே அதில் தீப்பிடித்தது ஆய்வில் தெரியவந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சா் ஹூசைன் அமீா் அப்துல்லாஹியான் மற்றும் 6 பேருடன் ரய்சி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டா் அஜா்பைஜானையொட்டிய மலைப்பாங்கான எல்லைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com