வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

வியத்நாமிலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

அந்த நாட்டுத் தலைநகா் ஹனோயின் மத்தியில் அமைந்துள்ள அந்தக் கட்டடத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதன் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய பொருள்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை அணுக வெறும் 2 மீட்டா் இடைவெளி கொண்ட குறுகிய பாதை மட்டுமே இருந்ததால் தீயை அணைப்பதில் தீயணைப்புப் படையினருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் பெரிய குழாய்களைப் பயன்படுத்தி தீயணைப்புப் படையினா் நெருப்பை அணைத்ததாக அரசு ஊடகம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com