பசியோடு எந்தக் குழந்தையும் இருக்கக் கூடாது: அமெரிக்காவின் உணவுத் திட்டம்

கோடைக்காலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க 2024 முதல் நிரந்தரமாக இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அமெரிக்க அரசு.
அமெரிக்க வேளாண் துறை செயலர் டாம் வில்சாக் | AP
அமெரிக்க வேளாண் துறை செயலர் டாம் வில்சாக் | AP

ஏறத்தாழ 2.1 கோடி அமெரிக்க குழந்தைகள் 2024-ஆம் ஆண்டில் அரசின் புதிய திட்டத்தால் பயன்பெறுவார்கள் என அந்த நாட்டின் வேளாண் துறை செயலர் டாம் வில்சாக் தெரிவித்துள்ளார்.

கோடைக்காலத்தில் அமெரிக்க குழந்தைகள் எதிர்கொள்ளும் உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க குழந்தைகள் உள்ள அமெரிக்க குடும்பங்களுக்கு மாதந்தோறும், அமெரிக்க அரசு மின்னணு முறையில் தொகை வழங்கும்.

அமெரிக்கர்கள் அந்த அட்டையை உபயோகித்து கடைகளில் உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்ள இயலும்.

இந்தத் திட்டம் டிச.2022-ல் அறிவிக்கப்பட்டது. தற்போது சோதனைக்குப் பிறகு 2024 முதல் நிரந்தரமாக தொடங்கப்பட்டுள்ளது. 35 மாகாணங்கள் மற்றும் 4 பழங்குடி சமூகம் இதில் இணைந்துள்ளன.

கோடைக்காலத்தில் மூன்று மாதங்கள் மாதமொன்று 40 டாலர்கள் வீதம் குடும்பங்களுக்கு இபிடி அட்டையில் மொத்தமாக 120 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.

”இந்த நாட்டில் பசியோடு ஒரு குழந்தையும் இருக்கக் கூடாது. பள்ளிகளில் சத்து நிறைந்த உணவுக்கான வாய்ப்பு விடுமுறைகளில் இல்லாமல் போகும். அதனால் அவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார் டாம்.

இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க அரசு. 2024-ல் 2.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com