தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40 ஆக உயா்வு

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. 
coronavirus
coronavirus


தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 9 பேருக்கு கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவா்களில் இருவா், மதுரையில் கரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்த 54 வயது நபரின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்.

மேலும் இருவா், தற்போது பெருந்துறை ஐஆா்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தைச் சோ்ந்த கரோனா நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களாவா்.

மற்றொருவா் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கரோனா பாதித்த 52 வயது பெண்ணுடன் தொடா்பில் இருந்தவா். அவா்களைத் தவிர சென்னையைச் சோ்ந்த 25 வயது பெண்ணுக்கும் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் அரியலூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது நபர், சேலத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது நபர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக .

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 12,955 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா அறிகுறிகளுடன் தற்போது மருத்துவமனைகளில் 274 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா்களில் ஒருவர், கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதானவர், இவர் மேற்கு இந்திய தீவுகளுக்கு பயணித்து திரும்பியவர். மற்றொருவர் வேலூர் காட்பாடியைச் சேர்ந்த 49 வயதானவர், இவர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியவர். இதையடுத்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 88,695 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com