விருதுகள் 2022

சாகித்திய அகாதெமியின் "ஃபெல்லோஷிப் விருது' எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது.
விருதுகள் 2022

மார்ச்

8: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு 2020-ஆம் ஆண்டுக்கான "மகளிர் சக்தி புரஸ்கார் விருது'  தோடர் இனக் கைவினை கலைஞர்களான ஜெயா முத்து, தேஜம்மா ஆகியோருக்கும், 2021-ஆம் ஆண்டுக்கான விருது சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஆர். தாராவுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

21: குடிமக்களுக்கு வழங்கப்படும் 2-ஆவது உயரிய விருதான "பத்ம விபூஷண் விருது' உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், நாட்டின் முதலாவது முப்படைத் தலைமைத் தளபதியான விபின் ராவத் ஆகியோருக்கு மறைவுக்குப் பிறகு வழங்கப்பட்டது. குலாம் நபி ஆசாத், டாடா நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ராஜீவ் மஹரிஷி உள்ளிட்டோருக்கு "பத்ம பூஷண் விருதுகள்' வழங்கப்பட்டது.

29: சாகித்திய அகாதெமியின் "ஃபெல்லோஷிப் விருது' எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது.

ஏப்ரல்

25: முதலாவது "லதா தீனநாத் மங்கேஷ்கர்' விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

மே

27: எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய "ரெட் சமாதி' (டூம் ஆஃப் ரெட்) என்ற ஹிந்தி நாவலுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டது. இது இந்திய மொழிகளில் இருந்து புக்கர் பரிசு பெற்ற முதல் புத்தகமாகும்.

ஆகஸ்ட்

15: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு "தகைசால் தமிழர்' விருதை சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

செப்டம்பர்

20: ஜாதியத்துக்கு எதிரான செயல்பாட்டாளர், நாவலாசிரியர், கவிஞரான மீனா கந்தசாமிக்கு "ஹெர்மன் கேஸ்டன்' விருது வழங்கப்பட்டது. ஜாதிய, பாலின, இன அடக்குமுறைக்கு எதிராக செயல்படுபவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

27: மூத்த ஹிந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு 2020-ஆம் ஆண்டுக்கான "தாதா சாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டது.

அக்டோபர்

3:  நவீன மனிதர்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதர்களின் முந்தைய பரிணாமமான நியாண்டர்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

4:குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட அலைன் ஆஸ்பெக்ட், ஜான் கிளாசெர், ஆன்டன் சீலிங்கெர் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

5: புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்களை உருவாக்குவதற்கும் பயன்படும் "கிளிக் கெமிஸ்ட்ரி' மற்றும் உயிரி ஆர்த்தோகனல் எதிர்வினைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக கரோலின் ஆர்.பெர்டோசி, மோர்டென் மெல்டல் மற்றும் பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

6:பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸூக்கு 2022-ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

7:மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் காப்பதற்காகத் தொடர்ந்து போராடி வருவதற்காக பெலாரஸ் ஆர்வலர் அலெஸ் பியலியட்ஸ்கி, ரஷியாவை சேர்ந்த குரூப் மெமோரியல், உக்ரைனைச் சேர்ந்த மனித சுதந்திர மையம் எனும் அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

10:வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் பென் பெர்னன்கே, நிபுணர்கள் டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

18:இலங்கை எழுத்தாளர் ஷெஹன் கருணாதிலகாவுக்கு "தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா' என்ற நாவலுக்காக "புக்கர் பரிசு' வழங்கப்பட்டது.
நவம்பர்

25:புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு "பவன்ஸ் லெஜண்டரி விருது' தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com