வர்த்தகம் 2022 

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததன் எதிரொலியாக, மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் வீழ்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
வர்த்தகம் 2022 

பிப்ரவரி

24 உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததன் எதிரொலியாக, மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,702 புள்ளிகள் வீழ்ந்து முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

26 எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி.


மார்ச்

14 அரசிடமிருந்து புதிதாக கையகப்படுத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸின் தலைவராக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல்

4 நிதித் துறையில் முன்னணி வகிக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கியும், ஹெச்டிஎஃப்சி நிதி நிறுவனமும் ஒன்றிணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த இணைப்பு நிறைவேற்றப்படும்போது, நாட்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) அடுத்த மிகப் பெரிய நிதி அமைப்பாக ஹெச்டிஎஃப்சி இருக்கும்.

14 முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை சுமார் 4,400 கோடி டாலரில் கையகப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்காவின் டெஸ்லா, ஸ்டார்-எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தொடங்கினார்.


மே

17 எல்ஐசி-யின் பங்குகள் முகமதிப்பைவிட 8.6 சதவீத தள்ளுபடி விலையில் (ரூ.867) பங்குச் சந்தைக்கு வந்தது. இறுதியில், 8 சதவீதம் குறைவான விலையில் (ரூ. 875) அந்தப் பங்குகள் விற்பனையாகின.


ஜூலை

1 தமிழகத்தில் முதல் செமிகண்டக்டர் தயாரிப்பு பூங்காவை அமைப்பதற்காக மாநில அரசுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த ஐஜிஎஸ்எஸ் வென்சர் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.


ஆகஸ்ட்

1 ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான, நாட்டின் மிகப் பெரிய 5ஜி அலைக்கற்றை ஏலத்தில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஏறத்தாழ 50 சதவீத அலைக்கற்றை ரூ.88,079 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து சுனில் மிட்டலின் ஏர்டெல்லுக்கு ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ஐடியாவுக்கு ரூ.18,799 கோடிக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

23 தொழிலதிபர் கெளதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமம், முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி-யின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாகக் கைப்பற்றியிருந்தது. அதையடுத்து, நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்ற, மற்ற முதலீட்டாளர்களிடமிருந்து பொதுச் சந்தையில் பங்குகளை வாங்கவிருப்பதாக குழுமம் அறிவித்தது.


செப்டம்பர்

5 தங்களுடன் இணைந்து ரயில்களை இயக்குவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு இந்தியன் ரயில்வே முதல்முறையாக அழைப்பு விடுத்தது. முக்கியமாக, ரயில் கட்டணங்களை நிர்ணயிக்கும் உரிமையும் தனியாருக்கு அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நவம்பர்

4 ட்விட்டரைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை அக்.27-இல் நிறைவு செய்த எலான் மஸ்க், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 50 சதவீதத்தினரை பணி நீக்கம் செய்தார். இந்தியாவில் மட்டும் 230 ட்விட்டர் பணியாளர்களில் 180 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com