மறைவுகள் 2022 

பழம்பெரும் கேலிச் சித்திரக் கலைஞர் நாராயண் தேவ்நாத் (96) காலமானார்.
மறைவுகள் 2022 


ஜன. 18

பழம்பெரும் கேலிச் சித்திரக் கலைஞர் நாராயண் தேவ்நாத் (96) காலமானார்.

பிப். 6

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் (92) காலமானார். 

பிப். 7

ஆசிய போட்டிகளில் 2 தங்கம் வென்று ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக போட்டியிட்ட விளையாட்டு வீரர் பிரவீண் குமார் காலமானார்.

மார்ச் 4

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய ஷேன் வார்ன் (52), நண்பர்களோடு தாய்லாந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

ஜூலை 17

மூத்த நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) உடல்நலக் குறைவால் காலமானார்.

ஆக. 14

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62) மும்பையில் காலமானார்.

ஆக. 30

பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய காரணமாகத் திகழ்ந்த சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் மிகயீல் கோர்பசேவ் (91)காலமானார்.

செப். 8

பிரிட்டனின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (96) காலமானார்.

செப். 10

அயோத்தியில் ராம ஜென்மபூமி குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ப்ரிஜ் பன்சி லால் (101)  காலமானார்.
 
செப். 11


முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல நடிகருமான யு.கிருஷ்ணம் ராஜு (82) ஹைதராபாத் மருத்துவமனையில் காலமானார்.

அக். 10

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்.

அக். 10

பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) வயது சென்னையில் காலமானார்.

அக். 31

இந்தியாவின் எஃகு மனிதர் என்றழைக்கப்பட்ட டாக்டர் ஜாம்ஷெட் ஜெ.இரானி (86),   காலமானார். 

நவ. 2

புகழ்பெற்ற பெண் உரிமை ஆர்வலரும், சுயதொழில் பெண்கள் சங்கத்தின் நிறுவனருமான இலா பட் (89) அகமதாபாதில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.

நவ. 15

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா (79) காலமானார்.

நவ. 21

தமிழறிஞர் ஒளவை நடராசன் (85)  காலமானார்.

டிச. 7

பிரபல ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மதுரையைச் சேர்ந்த மனோகர் தேவதாஸ் (86) காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com