மறைவுகள் 2023

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
மறைவுகள் 2023


ஜன.12: முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

பிப்.2: தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

பிப்.4: பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் (77) சென்னையில் காலமானார். 

பிப்.19: நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான மயில்சாமி (57) காலமானார்.

ஏப்.25: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அகாலி தள கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95) காலமானார்.

ஏப்.27: 1982-ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் கெளர் சிங் (74) காலமானார்.

மே.3: தமிழ்த் திரையுலகில் இயக்குநர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பல்வேறு திறமையுடைய மனோபாலா (69) உடல்நலக் குறைவால் காலமானார்.

மே.4: தென் இந்திய இசைக் கருவிகளை உலக அளவில் பிரபலப்படுத்திய மிருதங்க வித்வானான காரைக்குடி ஆர்.மணி (77)  காலமானார்.

மே.22: குணச்சித்திர நடிகர் சரத் பாபு (71), உடல்நலக் குறைவால் காலமானார்.
ஜூலை. 2: சர்வதேச, தேசிய விருதுகளை வென்ற இயற்கை காட்சிகளை படம்
பிடிக்கும் பிரபல புகைப்படக் கலைஞர் ஜெயராம் (74) காலமானார்.

ஜுலை.18:  கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி (79)  புற்றுநோய்க்கு சிகிச்சைபெற்று வந்தபோது காலமானார்.

ஆக.6: தெலங்கானா போராட்டத்தின்போது கிராமியப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த புரட்சிகர கவிஞர் கத்தார் (77)  உயிரிழந்தார்.

ஆக. 8: தமிழ், மலையாள திரைப்பட இயக்குநர் சித்திக் (69) மாரடைப்பால் காலமானார்.

ஆக. 15: "இந்தியாவின் கழிப்பறை மனிதர்' என்று அறியப்பட்ட பிந்தேஷ்வர் பாடக் (80) மாரடைப்பால் காலமானார்.

செப். 8: நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் காலமானார். 

செப். 16: ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா (79) உயிரிழந்தார்.

செப். 28:  "பசுமை புரட்சியின் தந்தை' என்று அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானியான எம். எஸ். சுவாமிநாதன் (98) 
காலமானார். இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு உணவு பாதுகாப்பை மேம்படுத்த முக்கிய பங்காற்றியவர்.

நவ. 15: சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா (102) உடல்நலக் குறைவால் காலமானார். 

நவ. 18: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கடரமணன் (92) வயதுமூப்பு காரணமாக காலமானார். 

நவ. 23: உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி (96) காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com