தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு: திரும்பி சென்ற வனத்துறையினர்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குலமங்கலம் கிராமத்தில்
தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு: திரும்பி சென்ற வனத்துறையினர்
Updated on
1 min read

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான  இடத்தில் தைல மரகன்றுகளை நடவு செய்ய வந்த வனத் துறையினர் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றனர்.

திருமயம் வட்டம், குலமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவில் தைல மரக்கன்றுகளை நடுவதற்காக வியாழக்கிழமை சென்றனர்.

தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து  தைல மரக்கன்றுகளை நடுவதற்கு பதிலாக பலன் தரும் மரக்கன்றுகளை நட வேண்டுமென வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ராமதீர்த்தார் கூறியது:

தைல மரக்கன்றுகள் நடுவதால் அதைச் சுற்றி உள்ள பாசனக் குளங்களில் உள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.

மேலும் வனத்துறையினர் 4 அடி உயரத்துக்கு மழை நீர்  வெளியேறாத வகையில் ஆங்காங்கே தடுப்பணைகளை அமைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

குளங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயம் செய்வதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி விவசாயிகளும் பொதுமக்களும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தைல மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என்றார்.

தகவலறிந்த பனையப்பட்டி போலீஸார், வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வனத்துறையினர் தைல மரக்கன்றுகளை நடாமல் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com