பெங்களூரில் மே 4-இல் சர்வதேச அழகுக்கலை மருத்துவர்கள் மாநாடு

பெங்களூரில் மே 4 முதல் 6-ஆம் தேதி வரை சர்வதேச அழகுக்கலை, தோல் சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

பெங்களூரில் மே 4 முதல் 6-ஆம் தேதி வரை சர்வதேச அழகுக்கலை, தோல் சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
 இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை மாநாட்டின் தலைவர் வெங்கடராம்மைசூர் கூறியது:
 பெங்களூரு ஜிகேவிகே மாநாட்டு அரங்கத்தில் மே 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் சர்வதேச அழகுகலை, தோல்சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு நடைபெறுகிறது. தொடக்க விழாவில் ஸ்ரீ ரவிசங்கர் குருஜி, அமைச்சர் சரண்பிரகாஷ்பாட்டீல் கலந்து கொள்ள உள்ளனர்.
 மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுக்கலை, தோல்சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் அழக்குக்கலை, தோல் சிகிச்சை மருத்துவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அத்துறையில் பல்வேறு பிரச்னைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 எனவே, அத்துறையில் உள்ள பிரச்னை, சவால், வளர்ச்சி குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. அழகுக்கலை என்ற பெயரில் மருத்துவர்கள் அல்லாத போலியானவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொள்ள நேரிடுகிறது.
 இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை மாநாட்டில் விவாதிக்க முடிவு செய்துள்ளோம். மாநாட்டையொட்டி, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெங்களூரில் 500 மரக் கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளோம்.
 முன்னதாக மே 2,3-ஆம் தேதிகளில் மைசூரிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். பேரணியின் போது அழகுக்கலை, தோல்சிகிச்சை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
 பேட்டியின் போது, சர்வதேச அழகுக்கலை, தோல்சிகிச்சை மருத்துவர்கள் மாநாட்டின் செக்ரட்டரி ஜெனரல் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com