பெங்களூரில் நாளைமுதல் கைநூலாடை திருவிழா

பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில் ஏப்ரல் 24 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மே 23-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கைநூலாடை திருவிழா (காதி) நடைபெறுகிறது.

பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில் ஏப்ரல் 24 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மே 23-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கைநூலாடை திருவிழா (காதி) நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக கை நூலாடை, ஊரகத் தொழில் வாரியத் தலைவர் ஒய்.என்.ரமேஷ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:-
ஊரகத்தொழில் மூலம் சுற்றுச்சூழல் தோழமை கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலும் சந்தைவாய்ப்புகள் குறைவாக இருந்தன. இதை போக்கி கைநூலாடையை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காகவும், ஊரகத் தொழில் மூலம் ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடந்த பல ஆண்டுகளாக கை நூலாடை திருவிழா நடைபெறுகிறது. இதன்படி, இந்த ஆண்டும் ஒரு மாதம் நடைபெறுகிறது. இதில், கைநூலாடையை தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும்
இந்தத் திருவிழாவில் 79 காட்சியரங்குகள் 17 மாநிலங்களில் இருந்தும், 61 காட்சியரங்குகள் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அமைக்கப்படுகின்றன. கைநூலாடை தவிர பட்டு, கம்பளி, பருத்தி, பாலியெஸ்டர் ஆடைகளும் விற்பனைக்கு கிடைக்கும்.
2014-ஆம் ஆண்டில் ரூ.17 கோடி, 2016-ஆம் ஆண்டில் ரூ.25 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு திருவிழாவை 1.25 லட்சம் பேர் கண்டுகளித்தனர். நிகழாண்டில் 2 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்கிறோம்.
தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பமையம் கைநூலாடை மூலம் 400 வகையான ஆடைகளைவடிவமைத்துள்ளது. ரூ.10கோடியில் 10 ஆயிரம் சதுர அடியில் பெங்களூரு, பெலகாவியில் கைநூலாடை- ஊரகத்தொழில் வணிக மாளிகையை அமைக்கவிருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com