கன்னட நாளேடுகளில் ஆங்கில விளம்பரங்கள் கூடாது: கன்னட வளர்ச்சி ஆணையர் எஸ்.ஜி.சித்தராமையா

கன்னட நாளேடுகளில் ஆங்கில விளம்பரங்கள் கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா தெரிவித்தார்.
கன்னட நாளேடுகளில் ஆங்கில விளம்பரங்கள் கூடாது: கன்னட வளர்ச்சி ஆணையர் எஸ்.ஜி.சித்தராமையா

கன்னட நாளேடுகளில் ஆங்கில விளம்பரங்கள் கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு, விகாஸ் செளதாவில் வெள்ளிக்கிழமை நீர்வளத் துறையில் கன்னட ஆட்சிமொழி அமலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறியது:
 கர்நாடகத்தில் கன்னடம் ஆட்சி மொழியாக அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதை அமல்படுத்துவதில் அதிகாரிகள் போதுமான அக்கறை செலுத்தாதது சரியல்ல. மாநில அரசு நிர்வாகத்தின் எல்லா படிநிலைகளிலும் கன்னட ஆட்சி மொழியை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை செய்யாவிடில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வளத் துறை சார்பில் கன்னட நாளேடுகளில் வெளியிடப்படும் ஒப்பந்தப்புள்ளி, மதிப்பீட்டு பட்டியல், கட்டண விகிதம் உள்ளிட்ட எந்தவிளம்பரமாக இருந்தாலும் அவற்றை ஆங்கிலத்தில் வெளியிடுவதாக புகார்கள் வந்துள்ளன. கன்னட நாளேடுகளில் ஆங்கிலத்தில் விளம்பரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

எனவே, கன்னட நாளேடுகளில் கன்னடத்தில்தான் விளம்பரம் வெளியாக வேண்டும். ஆங்கில நாளேடுகளில் கன்னடத்தில் விளம்பரம் வெளியிட்டால் மகிழ்ச்சி. இதை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வளத் துறையின் அனைத்து நிலைகளிலும் கன்னட ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்த வேண்டியது துறை அதிகாரிகளின் கடமையாகும். முதன்மைச் செயலாளர் தனது கீழமை அதிகாரிகளுக்கு கன்னடத்திலேயே கடிதம், சுற்றறிக்கை உள்ளிட்டவற்றை அனுப்பவேண்டும். அதேபோல, நீர்வளத்துறை இணையதளத்திலும் கன்னடம் முதன்மையானதாக இருக்க வேண்டும்.

கர்நாடகத்தில் மக்களுக்கு புரியும்மொழியாக கன்னடம் உள்ளது. எனவே, அரசு தொடர்புகள் அனைத்தும் கன்னட மொழியில்தான் இருக்க வேண்டும். கன்னட ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை கன்னட வளர்ச்சி ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் ராகேஷ்சிங், கன்னட வளர்ச்சி ஆணையச்செயலாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com