மருத்துவ மாணவர் சேர்க்கை: இரண்டாம் சுற்று விருப்பப் பதிவு தொடக்கம்

புதிதாக சேர்க்கப்பட்ட மருத்துவ, பல் மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்காக இரண்டாம் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட மருத்துவ, பல் மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்காக இரண்டாம் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
2017-18-ஆம் ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் தெரிவு செய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். 
மருத்துவக் கல்விக்கான முதல் சுற்றுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதிதாக 245 மருத்துவ, 25 பல் மருத்துவ இடங்களைச் சேர்த்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் சுற்றில் நிரப்பப்படாத இடங்கள் உள்பட மொத்தம் 1720 மருத்துவ, 1937 பல் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. 
இந்த இடங்களில் மாணவர்களின் சேர்க்கைக்காக நடத்தப்படும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில், விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை இணையதளத்தில் பதிவு செய்யலாம். சேர்க்கை இடங்களின் கையிருப்பு மற்றும் கட்டண விவரங்கள் ஆக.17-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆக.17-ஆம் தேதிமாலை 6 மணி முதல் ஆக.19-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விருப்பப்பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதனடிப்படையில், ஆக.21-ஆம் தேதி மாலை 5 மணிக்கு www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் இரண்டாம் சுற்றுக்கான இறுதி சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. 
ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவர்கள் ஏற்றுக் கொண்டால் ஆக.22 முதல் 23-ஆம் தேதிக்குள் அதை இணையதளத்தில் உறுதி செய்யவேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவர்கள், ஆக.24-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். 
இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com