பெங்களூரில் இன்று பாஜக மாநாடு

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாற்றத்துக்கான பயண மாநாடு நடைபெறுகிறது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாற்றத்துக்கான பயண மாநாடு நடைபெறுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பயணம் சென்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, புதிய கர்நாடகம்-மாற்றத்துக்கான பயணத்தை நவ.2-ஆம் தேதி பெங்களூரில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தொடங்கினார்.
44-ஆம் நாளாக சனிக்கிழமை கொப்பள் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாற்றத்துக்கான பயணத்தை முன்னிட்டு ஆங்காங்கே மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பாஜகவின் மாற்றத்துக்கான பயண மாநாடு பெங்களூரு, எச்ஏஎல் விமான நிலையத்துக்கு அருகே முருகேஷ்பாளையாவில் உள்ள விஸ்வேஷ்வரையா விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், அக்கட்சியின் மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங், மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெளடா, எம்.பி. பி.சி.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டுக்கு முன் பேரணியும் நடத்தப்படும்.
பெங்களூரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு 30 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com