தகுதிகள் இன்றி மருத்துவம் பார்ப்பவர்களே போலிகள்: அமைச்சர் ரமேஷ் குமார் பேச்சு

எந்த மருத்துவத்தையும் படிக்காமல், உரிய தகுதிகள் இன்றி போலி சான்றிதழ்களுடன் சிகிச்சையை அளிப்பவர்களே

எந்த மருத்துவத்தையும் படிக்காமல், உரிய தகுதிகள் இன்றி போலி சான்றிதழ்களுடன் சிகிச்சையை அளிப்பவர்களே போலி மருத்துவர்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
 கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர் எஸ்.பி.சங்கனூர் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து ரமேஷ்குமார் பேசியது:-
 கிராமங்களில் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு வைத்தியர்கள் மருத்துவம் பார்க்கின்றனர். இந்த மருத்துவ முறையை நாம் பலகாலமாகக் கடைபிடித்து வருகிறோம். இதனால் பலருக்கு நோய்கள் குணமாகியுள்ளன.
 பாரம்பரிய மருத்துவ முறைகளையும் கடைபிடிக்காமல், அலோபதி, யுனானி உள்ளிட்ட எந்த மருத்துவத்தையும் படிக்காமல் சிலர் போலி சான்றிதழ்களுடன் மருத்துவம் பார்க்கின்றனர். எந்தத் தகுதியும் இல்லாமல் மருத்துவம் பார்ப்பவர்கள் மட்டுமே போலி மருத்துவர்கள் ஆவார்கள்.
 இதுபோன்று போலி மருத்துவர்களாக கர்நாடகத்தில் 2,869 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிவமொக்கா மாவட்டத்தில் 634 பேர், கோலார் மாவட்டத்தில் 273 பேர், பீதர் மாவட்டத்தில் 276 பேர், பிஜாப்பூருவில் 195 பேர், பெலகாவியில் 160 பேர், பெங்களூரு மாநகரில் 8 போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெங்களூரு ஊரகம், ராம்நகர், சிக்மகளூரு, மண்டியா மாவட்டங்களில் தலா 1 போலி மருத்துவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 போலி மருத்துவர்கள் முதன்முறை அடையாளம் காணப்பட்டால் ரூ. 25 ஆயிரம் அபராதமும், 2-ஆம் முறை ரூ. 2.5 லட்சமும், 3-வது முறைக்கு மேல் ரூ. 5 லட்சம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். நாட்டு மருத்துவ முறையை பேணிக் காக்கும் வகையில் இன்னும் ஒரு மாதத்தில் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com