காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முன்னாள் எம்பி விஸ்வநாத் முடிவு

முன்னாள் மக்களவை உறுப்பினர் விஸ்வநாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

முன்னாள் மக்களவை உறுப்பினர் விஸ்வநாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியையும், குருபா சமுதாயத்தையும் அதளபாதாளத்திற்கு தள்ளி வருகிறார். அப்போதே அவரது குணத்தை அறிந்திருந்தால், அவரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க சம்மதித்திருக்க மாட்டேன்.
40 ஆண்டுகள் எனது தாய்வீடு போல காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். சித்தராமையாவால் தற்போது அந்த கட்சியை துறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் உள்பட மூத்த தலைவர்கள் யாரும் கவலைபடவில்லை. காங்கிரஸில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. 40 ஆண்டுகாலம் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி தலித், பழங்குயின, பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கட்சிக் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு இல்லை. கட்சியில் ஒரு சிலரே கூடி தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை எடுக்கின்றனர். எனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com