மும்பையில் செப்.2- இல் திருவள்ளுவர் சிலை திறப்பு

மும்பையில் திருவள்ளுவர் சிலையை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செப்.2- இல் திறந்துவைக்கிறார்

மும்பையில் திருவள்ளுவர் சிலையை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செப்.2- இல் திறந்துவைக்கிறார்.
இது குறித்து பம்பாய் திருவள்ளுவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழையும், தமிழர்களையும் மேம்படுத்துவதற்காக வி.தேவதாசனால் 60 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கப்பட்டதுதான் பம்பாய் திருவள்ளுவர் மன்றம். இதன் சார்பில் கடந்த 45 ஆண்டுகளாக பிரைட் தமிழ் உயர்நிலைப்பள்ளி நடத்தப்பட்டுவருகிறது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும் என்பதே தேவதாசனின் விருப்பமாகும். இந்த நிலையில், மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜேம்ஸ், திருவள்ளுவர் சிலையை திறக்கத் திட்டமிட்டுள்ளார்.
பெங்களூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை போலவே அரை டன் எடையும், 5 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவர் சிலை சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மும்பையில் உள்ள மன்ற வளாகத்தில் செப்.2- இல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
இதற்கானவிழாவில் ஸ்டாலினை பங்கேற்குமாறு மும்பை புகர் மாவட்ட திமுக தலைவர் அலிஷேக்மீரான், இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா.கருண், செயலர் கென்னடி, தாசன், நிக்சன், ஜெபர்சன் உள்ளிட்டோர் கேட்டுகொண்டனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com