போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக கால்நடைத் துறை மருத்துவர்கள் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கியுள்ள போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக கால்நடைத் துறை மருத்துவர்கள் சங்கத் தலைவர் சிவசரணப்பா தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கியுள்ள போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக கால்நடைத் துறை மருத்துவர்கள் சங்கத் தலைவர் சிவசரணப்பா தெரிவித்தார்.
பெங்களூரு பத்திரையாளர் சங்கத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தழுவிய போராட்டத்தில் கடந்த 4 நாள்களாக கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை கைவிடும்படி பல்வேறு இடங்களிலிருந்து அழுத்தம் வந்தவண்ணம் உள்ளது.
எங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, அதனை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். அதனை விடுத்து எங்கள் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்ய முயற்சிக்கக் கூடாது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஒற்றுமையாக ஈடுபட முடிவு செய்துள்ளோம். எங்கள் ஒற்றுமையை குலைக்க முயன்றால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.
பேட்டியின் போது, மாநில கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் எச்.பாண்டுரங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com