ஓய்வூதியம் பெறுவோர் கவனத்துக்கு.

ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் அவரவர் எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் அவரவர் எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து வருங்கால வைப்புநிதி-பெங்களூரு மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்,1995 மற்றும் தொழிலாளர் குடும்ப ஓய்வூதிய நிதி திட்டம்,1971-இன்கீழ் பெங்களூரில் உள்ள மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் இருந்து ஓய்வூதியம் பெறும் அனைவரும் அவரவர் எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை (டிஜிட்டல் லைஃப் சர்பிடிகேட்) உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழ் தொடர்பான தகவல்களை உறுதி செய்ய அருகில் உள்ள ஓய்வூதிய வழங்கல் வங்கி கிளைகளை பிபிஓ எண், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் டிச.31-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும்.
எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழை உறுதி செய்யத் தவறும்பட்சத்தில் 2018,ஜன.1-ஆம் தேதிமுதல் ஓய்வூதியம் வழங்கப்படாது. எனவே, ஓய்வூதியத்தைத் தடையில்லாமல் பெற அருகில் உள்ள வங்கி கிளைகளை அணுக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எண்ம ஆயுள் உறுதிச் சான்றிதழ் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி-080-25943315, சிண்டிகேட் வங்கி-080-22107345, கனரா வங்கி-080-22233443, கார்ப்பொரேஷன் வங்கி-080-22106729, விஜயா வங்கி-080-22216667, ஐசிஐசிஐ வங்கி-080-33667777, ஆக்சிஸ் வங்கி-080-25370622, எச்டிஎஃப்சி வங்கி-080-61606161, 22275754 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com