கர்நாடக சட்ட மேலவையின் அவை முன்னவராக அமைச்சர் எம்.ஆர்.சீதாராம் தேர்வு

கர்நாடக சட்ட மேலவையின் அவை முன்னவராக அமைச்சர் எம்.ஆர்.சீதாராம் தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடக சட்ட மேலவையின் அவை முன்னவராக அமைச்சர் எம்.ஆர்.சீதாராம் தேர்வு செய்யப்பட்டார்.
பெலகாவி சுவர்ண செளதாவில் திங்கள்கிழமை தொடங்கி சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, சட்ட மேலவையின் முன்னவராக எம்.ஆர்.சீதாராம்  பொறுப்பேற்றர். அவருக்கு மஜத உறுப்பினர் ரமேஷ்பாபு  வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து,   எதிர்க்கட்சித்தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசுகையில்,  "அமைச்சர் சீதாராமை வாழ்த்துகிறேன்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு உரிய பதிலையும்,  எதிர்க்கட்சியினருக்கு அதிக நேரம் பேசவும் அனுமதிக்க வேண்டும்.  அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினருக்கு பொறுமையாக விளக்க வேண்டும்.  கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரை அடக்கி ஆளாக் கூடாது'  என்றார்.
இதற்கு பதில் அளித்து சீதாராம் பேசுகையில், "இந்தப் பொறுப்பை வழங்கிய முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு நன்றி.  
அவை முன்னவராக, ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக மதிப்பதோடு, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com