மக்கள் ஆதரவளிக்காவிடில் பொதுவாழ்விலிருந்து விலகுவேன்

தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்காவிடில் பொதுவாழ்விலிருந்து விலகவும் தயாராக உள்ளதாக அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்காவிடில் பொதுவாழ்விலிருந்து விலகவும் தயாராக உள்ளதாக அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
பெலகாவி சுவர்ண செளதாவில் செவ்வாய்க்கிழமை மேலவையில் பூஜ்ய நேரத்தில் அவர் மேலும் பேசியது:
தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்வதை கண்டித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சிகிச்சை பெறமுடியாமல் சிலர் இறந்துள்ளதாக வந்த தகவல் வேதனையை அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தில் கருத்து மாறுபாடு உள்ளது. என்றாலும், அந்த அமைப்பில் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அரசு தாக்கல் செய்ய உள்ள தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா, மக்களுக்கு சாதமாக உள்ளதா? பாதகமாக உள்ளதா? என அந்த அமைப்பினர் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லையென்றால் பொதுவாழ்விலிருந்து விலகவும் தயாராக உள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com