"விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டம்'

நலிந்து வரும் விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஃபாம்தாஸா மூத்த செயல் அதிகாரி குமார் சாமசந்திரன் தெரிவித்தார்.

நலிந்து வரும் விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஃபாம்தாஸா மூத்த செயல் அதிகாரி குமார் சாமசந்திரன் தெரிவித்தார்.
 பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 காய்கனிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, ஹோட்டல், சில்லறை கடைகளுக்கு வழங்கி வருகிறோம். இதனால், விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு நேரடியாக செல்வதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 ஹாங்காங்கைச் சேர்ந்த எபிசிலான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நாங்கள், இந்தியாவில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். சென்னை, உதகை, கிருஷ்ணகிரி, ஒலக்கூர், மேட்டுபாளையம் ஆகிய பகுதிகள் உள்ள விவசாயிகளும், கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாபூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளும் எங்கள் திட்டத்தில் பயனடைவர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com