"கல்வி கற்பதற்கு பசி தடையாக இருக்கக் கூடாது'

கல்வி கற்பதற்கு பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வி.சி.கோபாலரத்னம் தெரிவித்தார்.

கல்வி கற்பதற்கு பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் வி.சி.கோபாலரத்னம் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை அக்ஷயபாத்திரா அறக்கட்டளையுடன் எண்ம சமையலறை திட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
இந்தியாவில் பசியால் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்குச் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் 30 சதமாக உள்ளது. எனவே, இதை சரிசெய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அக்ஷயபாத்திரா தொண்டு நிறுவனம், தேசிய அளவில் 12 மாநிலங்களில் 13,958 அரசு பள்ளிகளில் 16 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி வருகிறது.
அந்த தொண்டு நிறுவனத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பள்ளிக்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் உதவி செய்து வருகிறோம். பெங்களூரு உள்ளிட்ட 7 சமையறைகளில் முதல் கட்டமாக எண்ம சமையலறை திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
இதன்மூலம் மாணவர்களுக்கு சிறந்த மதிய உணவை சமைத்து வழங்க முடியும். கல்வி கற்பதற்கு பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
2020-ஆம் ஆண்டுகளுக்கும் 50 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்பதே அக்ஷயபாத்திராவின் இலக்காக உள்ளது. அதற்கு தேவையான உதவிகளை செய்வதை பெருமையாக கருதுகிறோம் என்றார்.
பேட்டியின் போது, அக்ஷயபாத்திரா அறக்கட்டளையின் மூத்த செயல் அதிகாரி ஸ்ரீதர்வெங்கட், சிஸ்கோ பெரு நிறுவனங்களின் விவகாரத் துறை மூத்த துணைத் தலைவர் டேயிஹு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com