"சேதமடைந்த சாலைகளால் மட்டுமே விபத்து ஏற்படுவதில்லை

சேதமடைந்த சாலைகளால் மட்டுமே விபத்துகள் ஏற்படுவதில்லை என பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

சேதமடைந்த சாலைகளால் மட்டுமே விபத்துகள் ஏற்படுவதில்லை என பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.
பெங்களூரு அண்மையில் பெய்த பலத்த மழையால் சாலைகள் குண்டும்,குழியுமாகியுள்ளன. இதனால் சாலைகளில் விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இது முற்றிலும் உண்மையல்ல. சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவது துக்கம் அளித்தாலும், விபத்துகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மழை வெள்ளதால் ஏற்பட்டுள்ள குழிகளாலேயே விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெங்களூரு கடந்த 10 ஆண்டுகளில் நிகழாண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. மழை நின்றவுடன் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் சித்தராமையா 15 நாள்களில் சாலைக் குழிகளை மூட உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்குள் சேதமடைந்த சாலைகள் அனைத்து சீரமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com