நவ.2-முதல் தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் நவ.2-ஆம் தேதி முதல் தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பெங்களூரில் நவ.2-ஆம் தேதி முதல் தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோட்டக்கலைத் துறை சார்பில் பெங்களூரில் நவ.2 முதல் 27-ஆம் தேதி வரை தோட்டக்கலை பயிற்சி முகாம் நடக்கவிருக்கிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். கன்னடம் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தோருக்கு 18 முதல் 35 வயதாகியிருக்க வேண்டும். இதர வகுப்பினர் 18 முதல்
33 வயதாகியிருக்கவேண்டும்.
இப்பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெங்களூரு,லால்பாக்பூங்காவில் உள்ள பயிற்சிமையத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, அங்கேயே அதை அளிக்கலாம். இதுதவிர, அக்.16 முதல் 25-ஆம் தேதிவரை w‌w‌w.‌h‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n  என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை அக்.25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080 - 26564538, 9071280906 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com