"தமிழ் கற்பதில் இருந்த தடையை தமிழ்ச் சங்கம் போக்கியுள்ளது'

தமிழ் மொழியை கற்பதில் காணப்பட்ட தடையை பெங்களூரு தமிழ்ச் சங்கம் போக்கியுள்ளது என்று குழந்தை இயேசு திருத்தலத்தின் அருள்தந்தை கில்பர்ட் ராஜ் தெரிவித்தார்.

தமிழ் மொழியை கற்பதில் காணப்பட்ட தடையை பெங்களூரு தமிழ்ச் சங்கம் போக்கியுள்ளது என்று குழந்தை இயேசு திருத்தலத்தின் அருள்தந்தை கில்பர்ட் ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு வண்ணாரப்பேட்டையில் உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தில், சங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த இனிமைத் தமிழ் வகுப்பின் நிறைவு விழாவும்,  புதிய வகுப்பு தொடக்க விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  இதில், கில்பட்ராஜ் பேசியது:-
உலகின் மூத்த மொழியாக தமிழை பெருமை கொள்கிறோம்.  பல மொழிகளைக் கற்றாலும் தாய் மொழியை கற்கும்போது,  மகிழ்ச்சி அடைய முடிகிறது. தாய் மொழியில் இறைவனை வணங்கும்போது,  உண்மையான அன்பும்  பாசமும்  பக்தியும் கிடைக்கின்றன.  கர்நாடக வாழ் தமிழ் குழந்தைகளுக்கு தமிழைக் கற்க முடியாமல் இருந்த தடையை பெங்களூரு தமிழ்ச்சங்கம் போக்கி,  தமிழ் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள வேண்டும்.  மேலும்,  தமிழ் வகுப்பு தொடர குழந்தை இயேசு திருத்தலம் ஏற்பாடு செய்யும் என்றார்.
இதையடுத்து,  அருட்தந்தை ஆல்பெண்லியோ பேசியது:-
கர்நாடகத்தில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு வீட்டில் தமிழில் பேச தெரிந்திருக்கிறது. ஆனால்,   எழுதவும்,  படிக்கவும் தெரியாமல் இருந்தது.  இந்தக் குறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.  தமிழ் மொழி புதையலைப் போன்றது.  தமிழை கற்க, கற்க அறிவு விரிவடைந்துகொண்டே இருக்கும்.
இன்றைய கணினி உலகத்தில் காணப்படும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் நிகரான தமிழ்ச்சொற்கள் தமிழிலே இருக்கின்றன.  புதிய ஆங்கிலச் சொல் வரும்போதும்,  அதற்கு ஏற்றத் தமிழ்ச் சொல் தோன்றிகொண்டே இருக்கிறது.  இதுதான் தமிழின் சிறப்பு. எனவே, தமிழ்க் குழந்தைகள் தவறாமல் தமிழ் பயில வேண்டும் என்றார்.
விழாவில் கர்நாடகத் தமிழ் கிறித்துவ முன்னணி இயக்கத் தலைவர் சகாயராஜ்,  செயலர் ஆரோக்கியதாஸ்,  பொருளாளர் பாஸ்கரன்,  அவைத்தலைவர் தாமஸ்,  பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் இனிமைத் தமிழ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் ராமசுப்பு,  வகுப்பின் பொறுப்பாளர் கார்த்தியாயினி,  சங்கத் துணைச்செயலாளர் அமுதபாண்டியன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
முன்னதாக,  பயிற்சியை நிறைவு செய்த 50 பேருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com