இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சித்தராமையா பாராட்டு

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த 100-ஆவது செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த 100-ஆவது செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
இஸ்ரோவின் சாதனை மகுடத்தில் மற்றொரு சாதனையாக பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்  மூலம் கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 மற்றும் கனடா, ஃபின்லாந்து, பிரான்ஸ்,  கொரியா,  இங்கிலாந்து,  அமெரிக்கா ஆகிய 6 நாடுகளின் சிறிய மற்றும் நுண்செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படுள்ளது. 
இஸ்ரோ தனது பொன்விழாவைக் கொண்டாடுவதற்கு முன்னதாக 100-ஆவது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.  இதன்மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் இஸ்ரோ உலக முன்னோடியாக உயர்ந்துள்ளது.  அறிவாற்றல்,  அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் இந்த சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்,  விஞ்ஞானிகள்,  தொழில்நுட்பர்களுக்கு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com