பெங்களூரு-ஜெய்ப்பூர்  இடையே சிறப்பு ரயில் சேவை

பெங்களூரிலிருந்து (யஷ்வந்த்பூர்) ஜெய்ப்பூருக்கு சிறப்பு சுவிதா அதிவிரைவு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. 

பெங்களூரிலிருந்து (யஷ்வந்த்பூர்) ஜெய்ப்பூருக்கு சிறப்பு சுவிதா அதிவிரைவு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. 
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழாக்கால கூட்ட நெரிசலை குறைக்க பெங்களூரிலிருந்து (யஷ்வந்த்பூர்) ஜெய்ப்பூருக்கு சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. 
ரயில் எண்-82653-பெங்களுரு (யஷ்வந்த்பூர்)-ஜெய்ப்பூர் சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில் வியாழக்கிழமை (பிப்.1) காலை 11.30 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூர்) ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த ரயில் சனிக்கிழமை(பிப்.3)காலை 6.35 மணிக்கு ஜெய்ப்பூர் ரயில்நிலையம் சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் ரயில் எண்-82654-ஜெய்ப்பூர்-பெங்களூரு (யஷ்வந்த்பூர்) சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில் சனிக்கிழமை (பிப்.3) இரவு 10.15 மணிக்கு ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை மாலை 5.55 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூர்) ரயில் நிலையம் வந்தடைகிறது. 
இந்த ரயில் சேவை பிப். 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-அம் தேதி வரை தொடரும். சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில் தும்கூரு, அரசிகெரே, தாவணகெரே, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகவை, மீரஜ், சதாரா, புணே, லோனாவாலா, பன்வெல், வசாய் சாலை, வாபி, சூரத், வதோதரா, ரட்லம், நிமச், சித்தூர், பில்வாரா, அஜ்மீர், கிஷன்கர்க் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள், உணவகத்துக்கு ஒரு பெட்டி இடம் பெற்றிருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com