கோலார் தங்கவயலில் இன்று தமிழர் பண்பாட்டு ஊர்வலம்

பொங்கல் விழா, தமிழர் பண்பாட்டு ஊர்வலம் ஆகியன கோலார் தங்கவயலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பொங்கல் விழா, தமிழர் பண்பாட்டு ஊர்வலம் ஆகியன கோலார் தங்கவயலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோலார் தங்கவயலில் உள்ள தமிழ்ச் சங்கத் திடலில் ஞாயிற்றுக்கிழமை( (ஜனவரி 14) காலை 10 மணிக்கு 38-ஆவது ஆண்டாக பொங்கல்விழா, தமிழர் பண்பாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது.
விழாவுக்கு கோலார் தங்கவயல் முதனிலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார் தலைமை வகிக்கிறார். விழாவில் நா.சு.மணி, சு.க.அன்பரசன் தொடக்கவுரையாற்றுகிறார். அப்புஜெயக்குமார், ஆர்.பிரபுராம் வரவேற்புரையாற்றுகின்றனர்.
திருவள்ளுவர் கொடியை கோபன்ராஜும், தமிழ் கொடியை துரை ராஜேந்தினும் ஏற்றிவைக்கின்றனர். பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு கமல் முனிசாமி மாலை அணிவிக்கிறார்.
ஆர்.வி.குமார், நாத்திகம் ஸ்ரீதர் முன்மொழிகிறார்கள். விழாவில் நகர்மன்றத்தலைவர் ரமேஷ், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். வழக்குரைஞர்கள் ஜோதிபாசு, மணிவண்ணன், திருவரங்கம், சி.கிருஷ்ணமூர்த்தி, அசோகன், தினேஷ் ஆகியோர் சட்ட உரிமைகள் குறித்துவிழிப்புணர்வு உரையாற்றுகின்றனர். இதை தொடர்ந்து, டி.என்.ரவிக்குமார் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
கோலார் தங்கவயல் எம்எல்ஏக்களாக பதவிவகித்து மறைந்த தலைவர்கள், தமிழறிஞர்கள், தங்கச்சுரங்கத்தை தொடங்கிய ஜான்டெய்லர், கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் உருவப்படங்களை தாஸ்சின்னசவரி, கே.சி.முரளி, எம்.வெங்கடேஷ், எஸ்.மகேஷ், டி.முனியப்பா, மு.அன்பு, வி.ராஜப்பா, தங்கராஜ், கு.அறிவழகன், துரையரசன் உள்ளிட்டோர் திறந்துவைக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்ப்பணி மற்றும் மக்கள்நலப்பணிகள் ஆற்றி வருகின்ற கோபன்ராஜ், சபாபதி, டாக்டர்.அலெக்சாண்டர், ராமு, கோவலன், வேளாங்கண்ணி பால், சந்திரசேகர், சம்பத், அகஸ்டின், டி.சுடர், ஆசிரியை பிலோமினா ஆகியோருக்கு தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் எம்எல்ஏ இராமக்கா, முன்னாள் எம்எல்ஏக்கள் மு.பக்தவச்சலம், எஸ்.ராஜேந்திரன், ஒய்.சம்பங்கி, சிறப்பு அழைப்பாளர்கள் டி.ஜெயபால், என்.சீனிவாஸ், எஸ்.டி.குமார், கே.ராஜேந்திரன், சுரேஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, சங்கத்தலைவர் சு.கலையரசன் தலைமையில் திருவள்ளுவர் கொடியேற்றி வைத்து ரூபா சசிதர் தமிழர் பண்பாட்டு ஊர்வலத்தை தொடக்கிவைக்கிறார். ஊர்வலம் நகரின் முக்கியவீதிகள் வழியாக சென்று தங்கவயல் தமிழ்ச்சங்கத்திடலில் நிறைவுபெறுகிறது. ஊர்வலத்தில் தமிழர் பண்பாடு, கலைகளை விளக்கும் ஊர்திகள் இடம்பெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com