இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியா ஏற்றுமதியில் சிறந்து விளங்கி வருகிறது என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார்.
விழாவில் மருத்துவத் துறையில் சிறப்பாக சேவை புரிந்தமைக்கான விருதை சென்னை மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸþக்கு வழங்குகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன், (இடமிருந்து)  கூட்டமைப

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் 50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும்

தென்னந்திய நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், நிர்மலா சீதாராமன் பேசியது:
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும் இந்தியாவில் வர்த்தகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்திய ஏற்றுமதிக்கான ஒற்றைச்

சாளர முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பல மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்த முறையின் கீழ் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான உரிமம், வெளிநாட்டில் வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி

நிறுவனங்கள் ஒற்றைசாளர முறையில் பெற்றுகொள்ள முடியும்.
இந்த முறையில், பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தச் சிக்கல்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு வர ஏற்றுமதியாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

அப்போதுதான் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய முடியும் என்றார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் ரல்ஹான், முன்னாள் தலைவர் ரஃபீக் அகமது, மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com