ஓவியர் வீரசந்தானம் காலமானார்

ஓவியர் வீரசந்தானம் (71) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வியாழக்கிழமை (ஜூலை 13) காலமானார்.
ஓவியர் வீரசந்தானம் காலமானார்

ஓவியர் வீரசந்தானம் (71) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வியாழக்கிழமை (ஜூலை 13) காலமானார்.
தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம், உலகத் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவியத் திறனால் நிஜமாக்கித் தந்தவர்.
தமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவியப் பள்ளியில் படித்து, மும்பையில் நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். தமிழினத்துக்காகப் போராடவேண்டும் என்ற நோக்கத்துடன் அங்கிருந்து விருப்ப ஓய்வில் வெளியேறினார்.
இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை இரவு இறந்தார்.
ராமதாஸ் இரங்கல்: ஓவியர் வீரசந்தானம் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com