சிறுநீரக மாற்று சிகிச்சை: அரசின் காப்பீட்டு தொகையை அதிகரிக்க வலியுறுத்தல்

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மியாட் மருத்துவமனையின் சிறுநீரக

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று மியாட் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு சிறுநீரகத்தைத் தானமாக கொடுப்பவருக்கும் சிறுநீரகத்தை மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்படுபவருக்கும் ரத்தப் பிரிவு பொருந்துதல் மிகவும் முக்கியமானதாகும். எனினும் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ சிறுநீரக பாதிப்பு ஏற்படும் நிலையில் ரத்தப் பிரிவு பொருந்தாத நிலை ஏற்பட்டு வழக்கமான சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.
நவீன சிகிச்சை முறை: மேலே குறிப்பிட்டவாறு ரத்தப் பிரிவு பொருந்தாமல் முரண்பட்ட ரத்தப் பிரிவு நிலையிலும் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யும் நவீன முறையை 1989}ஆம் ஆண்டு முதல் ஜப்பான் டோக்கியோ பெண்கள் மருத்துவ பல்கலைக்கழக நிபுணர்கள் நடைமுறைப்படுத்தி, இதுவரை 2,000}த்துக்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சைகளைச் செய்துள்ளனர். இத்தகைய நவீன சிகிச்சை முறை சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 2010}ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுவரை 400}க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் ஜப்பான் நிபுணர்...: ரத்தப் பிரிவு பொருந்தாவிட்டாலும் ரத்த நோய் எதிர்ப்பு அணுக்களை நீக்குதல் மற்றும் நவீன மருந்துகள் மூலம் கடந்த 28 ஆண்டுகளாக சிறுநீரக மாற்று சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துவரும் ஜப்பான் சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் டானபே மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்று தொழில்நுட்பத்தை டாக்டர்களுக்கு விளக்க சென்னை வந்துள்ளார்.
மருத்துவச் செலவை சமாளிக்க...: ரத்தப் பிரிவு பொருந்தும் வழக்கமான சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் செலவாகும்; ரத்தப் பிரிவு பொருந்தாமல் இருந்து நவீன சிகிச்சை முறையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ரூ.10 லட்சம் செலவாகும். எனவே முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தற்போது அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com