மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாற்று இடங்களில் திறக்கக் கூடாது

தேசிய, மாநில நெடுஞ்சாலையோரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாற்று இடங்களில் திறக்கக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாற்று இடங்களில் திறக்கக் கூடாது

தேசிய, மாநில நெடுஞ்சாலையோரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மாற்று இடங்களில் திறக்கக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் உத்தரப் பிரதேச அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசோ, மத்திய அரசோ நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது. தில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுடன் இணைந்து தமாகா போராட்டம் நடத்தும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளுக்கு மாற்றக் கூடாது. மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டவைகளாகவே இருக்க வேண்டும்.
பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். அப்போதுதான் விவசாயத்தை காக்கவும், குடிநீர் பஞ்சத்தை போக்கவும் முடியும். தமிழக அரசு ஏரி, குளம், ஆறுகளை பாதுகாக்கத் தவறிவிட்டது. பிற மாநிலங்களில் இருந்து தண்ணீரை பெற்று குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவா என்பதை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது, தமாகா மாவட்டத் தலைவர் ஐவேஇன் இளங்கோ, நகரத் தலைவர் பாண்டுரங்கன், மாநில நிர்வாகிகள் ஓ.வி.அ.வாமணன், செங்கை சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com